Friday, February 1, 2013

விஸ்வரூபம் எடுக்கும் விஸ்வரூபம்:


     கமலின் விஸ்வரூபம் பல்வேறு தடைகளை சந்தித்து தமிழ்நாடு தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது.. வடமாநிலங்களில் மட்டும் 800 தியேட்டர்களில் ஓடிகொண்டிருப்பதாக செய்தி.. தமிழில், தமிழ் கலைஞனால் எடுக்கப்பட்ட படம் இன்னும் அவனுடைய மாநிலத்தில் வராதது நம் நாட்டின் அரசியல் வாக்கு வங்கி என்ற பதத்தை நோக்கி விரைவாக கேவலமான பாதையை நோக்கி போய்கொண்டிருக்கிறது என்பதை பார்க்கும்போது கண்ணில் நீர்வடிகிறது.. நாம் கமல் என்ற ஒரு அருமையான கலைஞனின் கற்பனைகளை கட்டிபோட்டுவிட்டோம். இனிமேல் அவர் இது போன்ற படங்களை எடுப்பதை தவிர்த்து விடுவார் என்றே எனக்கு தோன்றுகிறது.. ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுக்கு ஓமர், பின்லேடன், அஜ்மல் என்று பெயர் வைக்காமல் ஓமனகுட்டன், பார்த்தசாரதி, அண்ணாமலை என்றா பெயர் வைக்க முடியும்???  நிறைய படங்களில் கடவுளை வணங்கும் ஒரு வில்லன் தவறுகளை செய்வான் (உ.ம். நான் கடவுள், சர்க்கார் (ஹிந்தி), இன்னும் நிறைய) அப்பொழுது எல்லாம் ஹிந்து மதத்தை சார்ந்தவர்கள் எதிர்த்தார்களா? முஸ்லிம் அமைப்பினருக்கு மட்டும் ஏன் இவ்வளவு மத வெறி என்பது தான் விளங்கவில்லை.. தீவிரவாதிகளுக்கு மதம் என்பதே கிடையாது. மதத்தை அவன் பகடை காயாக தான் பயன்படுத்துகிறான்..முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்றே பார்க்கபடுகிறார்கள்  என்ற வாதத்தை என்னால் ஏற்று கொள்ளவே முடியாது.. பொதுமக்களால், ஹிந்து மதத்தை சார்ந்தவர்களால் அவர்கள் மனிதர்களாவே பார்க்கபடுகின்றனர்.. ஈரானிய படமான கந்தகார் படத்தில் சிறுவர்கள் எப்படி ஆயுதமேந்த வேண்டுமென்று அருமையாக காட்டுகிறார் மோசன் மன்கல்ப் (இவர் ஒரு முஸ்லிம்).. அந்தப்படம் ஏராளமான விருதுகளை வாங்கியது என்பது ஒருபுறம் இருக்கட்டும்.. நீங்கள் இஸ்லாமிய மதம் அவமான படுத்தப்பட  கூடாது என்று நினைத்தால் தீவிரவாதிகளை புறக்கணியுங்கள்.. அவர்களுக்கு எதிராக இதே போன்று ஒருமித்த குரலில் உங்கள் எதிர்ப்புகளை காட்டுங்கள்..
சினிமா என்பது கற்பனைகளை விற்கும் ஒரு இடம். இங்கு மதம், சாதிகளுக்கு இடம் இல்லை.. ஒரு வரலாற்றை திரித்து கூறகூடதே ஒழிய இங்கு யாரையும் விமர்சிக்கலாம்..
முகமது கோரி பார்வையிலும் படம் எடுக்கலாம், மாவீரன் சிவாஜி பார்வையிலும் படம் எடுக்கலாம்.. முஸ்லிம் சகோதரர்களே நீங்கள் உங்களின் ஓட்டுகளுக்காக ஒரு நாட்டின் அடையாளமான வேற்றுமையில் ஒற்றுமை என்ற வார்த்தைக்கு பாதகம் விளைவிக்காதீர்கள்.. இந்த கட்டுரை நீங்கள் படிக்கும் போது விஸ்வரூபம் வெளிவந்திருக்கலாம் ஒரு சில வேட்டுகளோடு.. நீங்கள் ஜெயித்து விட்டீர்கள் என்று எண்ண வேண்டாம், ஜெயலலிதா முஸ்லிம்களின் ஆதரவை சம்பாதித்துவிட்டோம் என்றும் என்ன வேண்டாம்.. ஹிந்துக்கள் விளித்துகொள்ள இதுபோன்ற சம்பவங்கள் உதவும். அப்பொழுது நீங்கள் புறக்கணிக்க படுவீர்கள்...

No comments:

Post a Comment