இடதுசாரிகளும், நம்நாட்டு 'மதநல்லிணக்கவாதிகளும்', மற்ற அரசியல் கட்சிகளும், காங்கிரஸ்கார்களும் Article 377 (ஓரினச்சேர்க்கை எதிர்ப்பு சட்டம்) ஐ கூட இவ்வளவு ஆக்ரோஷமாக எதிர்த்ததில்லை (கேட்டால் முற்போக்கு சிந்தனையாளர்கலாம்) ஆனால் பெண்ணுரிமை மீறல், தீவிரவாத ஆதரவு, பிரிவினைவாதம், பொருளாதார சீரழிவு போன்றவற்றிக்கு காரணமாக இருக்கும் Article 370 (காஷ்மீருக்கான தன்னாச்சி உரிமை) ஐ எதிர்க்க தயங்குகிறார்கள். இவ்வளவு நல்லவர்கள் ஆதரிக்கும் அளவிற்கு அது என்ன காஷ்மீரை காப்பாற்றும் ஒன்றா???
Article 370:
1947-ல் இந்திய பிரிவினையின் போது காஷ்மீர் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சினையில் பாகிஸ்தான், காஷ்மீர் தன் நாட்டுடன் இணைக்கப்படவேண்டும் அல்லது அதற்கு சுயாட்சி வழங்கப்படவேண்டும் என்று முரண்டுப்பிடித்தது. அதன் விளைவாக பிரதமர் ஜவகர்லால் நேரு இந்த Article 370-ஐ அமல்படுத்தினார். இதன்படி காஷ்மீருகென்று தனி கொடி, சின்னம் மற்றும் சட்டங்கள். மேலும் வெளிநாட்டுக்கொள்கைகள் (Foreign Affairs), பாதுகாப்பு (Defence), நிதி (Finance), மற்றும் தகவல்தொடர்பு (Communication) போன்றவைகளில் மட்டும் இந்திய சட்டத்திற்கு உட்பட்டு காஷ்மீர் நடந்துக்கொள்ளவேண்டும். இவைகளுக்கு அப்பாற்பட்டு ஏதேனும் சட்டம் இயற்ற இந்திய அரசு காஷ்மீர் சட்டசபையின் அனுமதிப் பெற்றாகவேண்டும் என்பதே. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கான சட்டங்கள் காஷ்மீருக்கு பொருந்தாது. அதாவது வேருமாநிலத்தை சேர்ந்த ஒரு நபரால் காஷ்மீர் உள்ள நிலத்தை வாங்கமுடியாது, வியாபாரம் செய்ய அனுமதி இல்லை, அங்கு சென்று படிக்ககூட அனுமதியில்லை என்னும் அளவிற்கு. சுருக்கமாக சொன்னால் ஒரு பெரியநாட்டில் உள்ள தனி நாடு.
போதும் மேலும் சொன்னால் குழப்பம் ஏற்படவாய்புண்டு. என்றால் பொருளாதாரம் போல சட்டமும் மிகவும் குழப்பக்கூடியதே என்பதால்..
இதன் விளைவுகளை பார்ப்பதற்குமுன் அது எப்படி இயற்றப்பட்டது என்று பார்த்துவிட்டால் தேவையில்லாத குழப்பத்தை தவிர்கலாம். கொஞ்சம் வரலாறுதான் ஆனால் வரலாறு மிகவும் முக்கியம் நண்பரே!!!
1947 நடந்த போரில், காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் லபக்கிக்கொண்டு (10 மாவட்டங்கள் மட்டுமே கொண்ட) ஆசாத் காஷ்மீர் என்று பெயரிட்டு சுயாட்சி வழங்கியது. அதன் சுயாட்சி பெயரளவில் மட்டுமே. இங்குதான் மக்களை கடத்தி ஜிகாதிகளாக மாற்றுவது அதிகம். ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்துகொள்ளுதல், பெண்களுக்கான கல்வி மறுப்பு, ஆயுதப்பயிற்சி போன்றவைகள் நடக்கும். காஷ்மீரின் மற்றொரு பகுதியை தான் இந்தியா வைத்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவு உறுதி செய்யப்பட்ட பிறகு பாகிஸ்தான் சில முஸ்லிம் அடிப்படைவாதிகளை தூண்டிவிட்டு முஸ்லிம்கள் பெரும்பான்மை பெற்ற காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைக்கப்படவேண்டும் என்று கூறியது. ஆனால் காஷ்மீர் மன்னராக இருந்த ஹரி சிங் மகாராஜா இந்தியாவுடன் இணைய விரும்பினார் ஆனால் மக்கள் (முஸ்லிம்கள் மட்டும்) பாகிஸ்தானுடன் இணைக்கப்படவேண்டும் என்று விரும்பினர். இந்த சிக்கலின்விளைவாக ஐநா சபையும், பிரிட்டிஷ் அரசும் சேர்ந்து இடியாப்ப சிக்கல் ஏற்ப்படுத்தும் விதமாக காஷ்மீருக்கு தன்னாட்சி வழங்க அறிவுரை(?)க்கூறியது. பாகிஸ்தானும் அதை கண்மூடித்தனமாக ஏற்று தன்னாட்சிக்காக முரண்டு பிடித்தது. இதனால் இந்திய அரசு காஷ்மீரில் Article 370 ஐ கொண்டுவந்தது. காந்தி, வல்லபாய் பட்டேல், மேலும் பலபேர் இதை எதிர்த்தார்கள் ஆனால் நேரு மட்டும் விடாப்பிடியாக மற்றவர்களை உதாசீனப்படுத்தி, இதைக்கொண்டுவந்தார் (இதில் நேருவுக்கும் பட்டேலுக்கும் பிரச்சினை உண்டானது). நேருவுக்கு உதவியாக இருந்தவர் நம்மூர் கோபால்சாமி ஐயங்கார் என்பது கூடுதல் தகவல் (தஞ்சாவூரை சேர்ந்தவர்).
போதும் உன் வரலாறும் நீயும் என்கிறீர்களா?? சரி. இனிமேல் இதற்கு வரலாறு சொன்னால் போர் அடித்துவிடும். இதனால் ஏற்பட்ட விளைவுகளை பார்ப்போம்..
- அங்குள்ள மக்களில் முஸ்லிம் அல்லாதவர்கள் வியாபாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.
- மற்ற மதத்தினரின் வழிபாட்டுத்தலங்கள் சேதப்படுத்தப்பட்டன. அண்மையில் நடந்த சோம்நாத் கோவில் விவகாரம்கூட இதன் விளைவே.
- பெரும்பாலான இந்து சீக்கிய மக்கள் கத்தி முனையில் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டனர்.உலகிலேயே மனிதஉரிமை மீறல்கள் குறிப்பாக பெண்ணுரிமை மீறல்கள் காஷ்மீரிதான் அதிகம்.
- மனித உரிமை மீறல்கள் பெரிது அரங்கேறியது. இருபது வருடங்களில் 24 பெரிய அளவிலான கலவரங்கள், கொன்றொழிப்புகள் நடந்துள்ளது.
- பெண்களின் அடிப்படை உரிமைகள் கூட மருதழிக்கப்பட்டது. 1990-ல் இருந்து 20000-த்திற்கும் மேற்பட்ட பெண்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
- இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் மூலம் மற்ற மதத்தினரின் உரிமைகள் பறிக்கப்பட்டு தற்கொலைகளுக்கு தூண்டப்படிருக்கிறார்கள்.
- காஷ்மீரை சேர்ந்த பெண் மற்ற மாநிலத்தை சேர்ந்த ஆணை திருமணம் செய்து கொண்டால் அந்த பெண்ணுக்கு காஷ்மீரில் குடியிருக்க அனுமதி இல்லை என்னும் சூழல் உருவானது. மத்திய அமைச்சர் சச்சின் பைலட் காஷ்மீரை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துக்கொண்டதால் இந்த பிரச்சினையை அவர் சந்தித்தார். ஆனால் அந்த மாநிலத்தில் உள்ள ஆண்களுக்கு இந்த சட்டம் விதிவிலக்கு
- மற்ற மதத்தை சேர்ந்த மாணவர்கள் அங்குள்ள பல்கலைகழகங்களில் சேர 2-5% அளவிற்கே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- பிரிவினைவாதிகளை ஊக்குவித்ததின் விளைவாக சட்டத்திற்கு புறம்பான வேலைகள் அரங்கேறியது. தீவிரவாதிகளுக்கு புகலிடமாக அமைந்தது.
- பாதுகாப்பில்லாத மாநிலம் என்பதால் முதலீடுகள் பாதிக்கப்பட்டு வேலையின்மை ஏற்பட்டது. பெரும்பாலான மக்களின் தொழில் விவசாயம்தான்.
- மதக்கல்வி பெரிதும் ஊக்குவிக்கப்பட்டு அறிவுசார்கல்வி பாதிக்கப்பட்டது.
இவைகள் எல்லாம் இன்னும் நிகழ்ந்துக்கொண்டிருப்பதற்கு காரணம் இந்திய அரசு இந்த விவகாரங்களில் தலையிட அனுமதியில்லை என்பதே..
தேவையா இந்த Article 370?
பாஜக தன் 2014 தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் Article 370-ஐ ரத்து செய்து ஒரே சட்டம், ஒரே நாடு என்று கூறியுள்ளது. மற்ற எந்த ஒரு கட்சியும் வாய்திறக்கவில்லை. ஆம் ஆத்மி ஒருப்படி மேலேசென்று காஷ்மீரை பாகிஸ்தானுக்கு விட்டுத்தரலாம் என்று கூறுகிறது. மதநல்லிணக்கவாதிகள் பாஜக மத அரசியல் நடத்துகிறது என்று குற்றம் சாட்டுகின்றன.
என்னது முடிவா?? நான் இதை சொல்வதின் நோக்கம் உங்கள் சிந்தனையை தூண்டுவதற்கு தானே அன்றி என் முடிவை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக அல்ல. எது நியாயம் என்று நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்..
No comments:
Post a Comment